தமிழீழபெண்களை கொடுமை படுத்தும் நுண்கடன்-வவுனியாவில் ஆர்பாட்டம்

நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வடதமிழீழம் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக வழிப்புணர்விற்கான மக்கள் ஒன்றியம்இ வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம்இபசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அனைத்துலக மகளிர் தினமான இன்று வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்பாட்டத்தில் பெருமளவான பெண்கள்இ கலந்து கொண்டதோடு அரசிற்கெதிராகவும் அரசியல்வாதிகளிற்கெதிராவும் கோசங்களை எழுப்பி
‘கடன் சுமை தவிர்ப்போம்’, ‘நுண்நிதி கடன் சுமை குடும்பங்கள் சீரழிவு’,‘ஏழைகளின் வாழ்வில் விளையாடாதே’, ‘பள்ளிக்கு செல்வதா அம்மாவின் கடனை அடைப்பதா’, ‘மக்களையும் நாட்டையும் அடகு வைக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-eelamnews.co.uk

TAGS: