ரந்தாவ் இடைத்தேர்தலில், பிஎச் வேட்பாளராக எஸ் ஶ்ரீராம்

ரந்தாவ் இடைத்தேர்தல் | ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக டாக்டர் எஸ் ஶ்ரீராம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

நேற்று, பெட்டாலிங் ஜெயாவில் இருக்கும் பிகேஆர் தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

கடந்தமுறை, அவர் போட்டியிடும் தகுதியை இழந்தது மட்டும் அதற்குக் காரணமல்ல, மாறாக, தேர்தலில் போட்டியிட அவருக்குக் கல்வி தகுதி உண்டு, ரந்தாவ் வட்டாரத்தில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு என அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிகேஆர் ரெம்பாவ் கிளையின் துணைத் தலைவரான ஶ்ரீராம், நெகிரி செம்பிலானில், ஒரு தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுக்கும் நிபுணராகவும் (எனெஸ்தெதிஸ்) பணியாற்றுகிறார்.

சில தரப்பினரைப் போல், இன உணர்வில், ஒரு மலாய்க்காரரை அங்கு வேட்பாளராக நிறுத்த பிகேஆர் விரும்பவில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.

“இந்த இடைத்தேர்தலில், ஒரு தரப்பினர் இன, மதப் பிரச்சனைகளைக் கையாண்டு, வாக்காளர்கள் நம் வேட்பாளரைப் புறக்கணிக்க வேலை செய்வர் என்பதும் நமக்குத் தெரியும்,” என்றார் அன்வார்.