போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்களின் பாவனை நிறுத்தம்

உலகளாவிய ரீதியில், 737 மெக்ஸ் ரக விமானங்களை போயிங் நிறுவனம் நிறுத்தியுள்ளது  எத்தியோப்பிய விமான விபத்தையடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது

எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பில் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், 737 மெக்ஸ் ரக 371 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில், 157 பேர் உயிரிழந்ததுடன், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஜகார்த்தாவில் இருந்து 189 பயணிகளுடன் புறப்பட்டு ஒரு சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானமும் பொயிங் 737 மெக்ஸ் ரக விமானம் என்பது குறிப்பிடத்தக்கது இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர்

இதனிடையே, விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, எத்தியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து போயிங் 737 மெக்ஸ் 8 ரக விமானங்களை பல நாடுகள் சேவையிலிருந்து நிறுத்தியுள்ளதை தொடர்ந்து இந்தியாவும் அதனை பின்தொடர்ந்துள்ளது மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் குறித்த ரக விமானங்கள் ஐரோப்பிய நாடுகளின் வான்பரப்பில் பறப்பதற்குத் தடை விதித்துள்ளது போயிங் 737 மெக்ஸ் விமானங்களே வரலாற்றில் மிக வேகமாக விற்பனை செய்யப்படும் விமானங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilcnn.lk