ஜெனிவாவிலிருந்து ரணிலை மிரட்டிய சுமந்திரன்! அதிரடியாக ஏற்பட்ட மாற்றம்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற்று வருகிறது.

இதன்போது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஜெனிவாவில் களமிறங்கியுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தொடர்பான பிரேரணையில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளக் கூடாது என, ஜெனிவாவிலிருந்து பிரதமர் ரணிலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து ஜெனிவாவிலுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொடர்பு கொண்ட பிரதமர் இந்த விடயம் குறித்து பேசியுள்ளார்.

உடனடியாக ஜெனிவா வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தாங்கள் பிரேரணையில் திருத்தத்தை கோரவில்லை என்று குறிப்பிட்டார்.

-tamilcnn.lk

TAGS: