ஜெனீவாவில் ஈழ மன்னன் சங்கிலியனின் பரம்பரை இளவரசன் – பரபரப்புப் பேச்சு !

சிங்கள அரசுக்கு சாதகமாக பேசிய இவர், தனக்கு பாதுகாப்பு தந்து நாட்டிற்கு அழைக்கட்டுமாம்!

ஜெனீவாவுக்கு வருகை தந்துள்ள சங்கிலிய மன்னனின் வழித்தோன்றலான இளவரசர் கனகராஜா ஐ.நா மனித உரிமைச்சபையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நெதர்லாந்தில் தற்போது மன்னர் அங்கீகாரத்துடன் வாழ்ந்து வரும் இவர், தனக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில் இலங்கைக்கு திரும்பிச் சென்று ஆட்சி செய்யாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழiமை காலை இடம்பெற்றிருந்த பக்க நிகழ்வொன்றில் தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையை நிராகரித்த அவர், சிறிலங்கா இறைமையுள்ள நாடு என்றும், பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு குறிப்பிட்டார்.

பக்க நிகழ்வுக்கு பின்னராக, தமிழர் தரப்பின் கேள்விகளுக்கு பதில் கூற தடுமாறிய மன்னர், தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழர் தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: