தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை!

ஆதிச்சநல்லூர், அகழ்வாய்வில் கிடைத்த இரண்டு பொருள்களில் ஒன்று கி.மு. 905, இன்னொன்று கி.மு. 971 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவை என ’கார்பன் பரிசோதனை’ முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அறிய முடிகிறது,

குறித்த தகவலை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் அகழாய்வை நடத்துவது குறித்து மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவிலேயே பழமையான நாகரீகம் தமிழ்தான் என உறுதியாகியுள்ளது.

இன்றைய தேதியில் இருந்து 2999 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டடம் கட்டுதல், பானைகள் உருவாக்குதல் ஆகியவற்றின் பயன்பாடு அறிந்த நாகரிகமான ஒரு இனமாக தமிழர் இனம் இருந்துள்ளது என்றால் அதில் இருந்து நாங்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும்?!

இந்த தகவலை உலகத்தமிழர்கள் பெருமையுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: