ஜானராஜா மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்

பண மோசடியில் ஈடுபட்டதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி), தடுத்து வைக்கப்பட்ட தொழிலதிபர் ஜி ஞானராஜா, நாளை கோலாலம்பூர் செஸ்ஷன் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்படுவார்.

இன்று காலை 11.40 மணியளவில், எம்ஏசிசி தலைமையகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு, வழக்கு விசாரணை செய்யப்படுகிறது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்ஏசிசி கூறியுள்ளது.

எம்ஏசிசி-யின் கூற்றுப்படி, நிதி மோசடி தடுப்பு சட்டம், பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் வருவாய் (AMLATFPUAA) 2001 போன்ற சட்டவிதிகளின் கீழ் பல குற்றச்சாட்டுகளை ஞானராஜா எதிர்கொள்வார்.

-பெர்னாமா