விவசாயத்தை ஏளனமாக நினைப்பவர்களுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக சாதித்துக்காட்டிய இளம் பெண்!

கனடாவில், விவசாயத்துறையில் ரூ.1 கோடி சம்பளத்திற்கு இந்திய மாணவி ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சம்பவம் தொடர்பில் மேலும்.,

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புர் பகுதியை சேர்ந்த கவிதா ஃபாமன், Lovely Professional University-ல் M.Sc Agriculture படித்துவந்துள்ளார். படிப்பின் மீது அதிக ஆர்வமும் கற்றல் ஆற்றலும் அதிகமாக இருந்த காரணத்தால், கல்லூரியின் முதல் மாணவியாக திகழ்ந்த கவிதா, அனைவரும் ஆச்சரியப்படும் அளவிலான வேலைக்கு சென்றுள்ளார்.

கனடாவில் உள்ள Monsanto Canada என்ற விவசாயம் சார்ந்த நிறுவனத்தில், ரூ.1 கோடி சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துள்ளார் கவிதா. பஞ்சாப் மாணவர்களின் கனவு நிறுவனமாக இருக்கும் அந்நிறுவனத்திற்கு கவிதா வேலைக்கு செல்லப்போவது சக மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் விவசாயத்திற்கு இளைஞர்கள் முக்கியத்துவம் தராதநிலையில், பஞ்சாபை சேர்ந்த இளம்பெண், விவசாயத்துறையில் வேலைக்குச்செல்லப்போவது பலரது பாராட்டை பெற்றுள்ளது.

-athirvu.in

TAGS: