மல்லையாவை நாடு கடத்தலாம்..! இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு..!

டெல்லி: வங்கிக் கடன் புகழ் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பே எம்மா அர்புத் நாட் என்கிற நீதிபதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார்.

ஆனால் இங்கிலாந்து சட்ட நடைமுறைப்படி ஒருவருக்கு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முழு உரிமை இருப்பதால் விஜய் மல்லையாவும் மேல் முறையீடு செய்யலாம் எனச் சொன்னது தான் தாமதம், விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசு நாடு கடத்தக் கூடாது என இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக விசாரிக்கப்பட்டு, இன்று (ஏப்ரல் 08, 2019) ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறது இங்கிலாந்து நீதிமன்றம். அதன் படி விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம். என தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

தீர்ப்பு

விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டாம் எனச் செய்த மேல் முறையீடுகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதோடு இங்கிலாந்தின் உள் துறை அமைச்சகச் செயலர் கையெழுத்திட்ட நாடு கடத்தும் ஆர்டரின் படி விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்திய விசாரணைகள்

இந்தியாவின் அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை என பல்வேறு இந்திய அரசு அமைப்புகள் மல்லையாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறார்கள். அதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மல்லையா கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் ஓடியதும் ஒரு வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

73,000 டூ 30,000 பவுண்ட்

சமீபத்தில் தான், மல்லையா தான் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பிச் செலுத்த தனக்கு வழங்கும் நிதிச் சலுகைகளில் பாதிக்கு பாதியைக் குறைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நீதிமன்றம் மல்லையவுக்கு ஒரு மாதம் சுமார் 73,300 பவுண்ட் வரை செலவழித்துக் கொள்ள அனுமதித்தது. ஆனால் மல்லையா 29,500 பவுண்ட்கள் போதும் எனச் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனக்கு மட்டும் ஏன்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு பொதுத் துறை வங்கிகள் கடன் கொடுத்து நிறுவனத்தை நடத்தி கடனை திருப்பி எடுத்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறார்கள். அதே போலத் தானே தானும் கடன் வாங்கி கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்தை நடத்தி கடன்களைத் திருப்பி அடைக்க முயற்சித்தேன்.. என்னை மட்டும் ஏன் இந்திய அரசு இத்தனை பாரபட்சமாக நடத்துகிறது என ட்விட்டரில் முன்பே குமுறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

tamil.goodreturns.in

TAGS: