அமேசன் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் பழங்குடித் தலைவர் ! கை கொடுக்குமா உலக நாடுகள் ?

அமேசன் காடுகளை பாதுகாக்கும் நோக்கில் பிரபலங்களையும் தலைவர்களையும் சந்திக்கும் நோக்கில் பிரேசிலின் பிரபல பழங்குடித் தலைவர் ராவோனி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உதட்டுத் தகடு, இறகுகளைக் கொண்ட தலைப்பாகை இப்படி வித்தியாசமான தோற்றத்துக்குப் பெயர் பெற்றவர் ராவோனி.

அவரும் அவரது சகாக்கள் இருவரும் ஐரோப்பியத் தலைவர்கள் மற்றும் திருத்தந்தை ஆகியோரைச் சந்தித்து பேசவுள்ளனர்.

அமேசன் காடுகளை பாதுகாப்பதற்காக நிதி திரட்டவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பிரேசில் பழங்குடியினரில் பலர் மரம் வெட்டுபவர்களாகவும் விவசாயிகளாகவும் உள்ளனர். காடுகளைச் சார்ந்தே அவர்களது வாழ்வாதாரம் அமைந்துள்ளது.

சுமார் 800,000 பேர் வசிக்கும் அத்தகைய காடுகள் பல்லாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. அவர்களுக்கு வெளி உலகத் தொடர்பு கிடையாது. பழங்குடியினரும் அத்தகைய வாழ்க்கையைத் தொடரவே விரும்புகின்றனர்.

எனினும், பிரேசில் ஜனாதிபதி ‘அமேசன் காடுகளில் வாழ்பவர்கள் விலங்குகளைப் போல் அடைந்து கிடப்பது நல்லதல்ல. அவர்களை வெளியில் கொண்டுவரவேண்டும்.’ என தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk