அடுத்த ஐக்கிய அமெரிக்க ‘ஜனாதிபதித் தேர்தலில் தலையிட வேண்டாம்’

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தலையீட்டை ஐக்கிய அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என ரஷ்யாவிடம் நேற்று முன்தினம் தெரிவித்த ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் அது மீண்டும் இடம்பெறாதிருக்கும் எனக் காட்டுவதற்கு ரஷ்யா நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், சோச்சியில் மைக் பொம்பயோவைச் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஐக்கிய அமெரிக்க தேர்தல்களில் ஒருபோதும் ரஷ்யா தலையிடவில்லை என அவருக்குத் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ரஷ்ய, ஐக்கிய அமெரிக்க உறவுகள், தொடர்புகளை திருத்திக்கொள்ளவும், ரஷ்யாவும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் பொதுவான விருப்பத்தைக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் விரும்ப்கின்றார் என்ற எண்ணப்பாட்டைத் தான் கொண்டிருப்பதாக மைக் பொம்பயோவிடம் ஜனாதிபதி புட்டின் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளராக முதற்தடவையாக ரஷ்யாவுக்கு விஜயம் செய்திருந்த மைக் பொம்பயோ, முன்னதாக உக்ரே, வெனிசுவேலா தொடர்பான பிரச்சினைகளின் ரஷ்ய வெளிய்நாட்டமைச்சர் சேர்ஜி லவ்ரோவ்வுடன் முரண்பட்டிருந்தார்.

-tamilmirror.lk