மான்ஸ்டர் திரைவிமர்சனம்

படங்களின் கதை எப்படி இருந்தாலும் சரி என்ற மனப்பாங்கு சில நேரங்களில் வந்தபோதிலும் சில நடிகர்கள், இயக்குனர்களுக்காகவே படத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணம் வரும். அப்படியான ஈர்ப்பை இப்படம் பெற்றுள்ளது Sj.சூர்யா நடிப்பில் வந்துள்ள மான்ஸ்டர். படம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.. வாருங்கள்…

கதைக்களம்

படத்தின் ஹீரோ Sj.சூர்யா ஒரு அரசு பணியில் இருக்கும் ஊழியர். அவருக்கு தஞ்சாவூரில் ஒரு எளிமையான குடும்பம். கேர்க்டரில் அவர் ரொம்ப சாஃப்ட். மற்ற உயிர்களை கொல்வதில் இவருக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. அவருக்கு ஒரே நண்பர் கருணாகரன். சென்னையில் பணியாற்றும் சூர்யாவுக்கு பெற்றோர் நீண்ட நாட்களாக வாழ்க்கை துணையை தேடி வருகிறார்கள்.

ஆனால் அமைந்த பாடில்லை. இப்படியிருக்க ஒரு பெண் பார்க்க சொந்த ஊருக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு அவருக்கு ஒரு ஏமாற்றம். இந்நிலையில் புதுவீட்டிற்கு குடிபெயரும் அவருக்கு ஒரு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவரின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் வருகிறார். திருமணத்திற்காக இருவரும் தயாராகிறார்கள். அதே வேளையில் நகை கடையில் வேலை செய்யும் பிரியா சந்தேகத்திற்கிடமான வைரத்தால் போலிஸில் சிக்குகிறார். அதே வேளையில் வீட்டில் இருக்கும் ஒரு எலி ஒன்று செய்யக்கூடாத அட்டகாசம் செய்ய Sj.சூர்யா எப்படி அதை சமாளிக்கிறார்? சந்தேகமான வைரம் எப்படி வந்தது? எலி என்ன ஆனது என்பதே இந்த மான்ஸ்டர் பட கதை.

படத்தை பற்றிய அலசல்

Sj.சூர்யாவை பற்றி நாங்கள் சொல்வதற்கு முன்பே நீங்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள். தான் ஒரு திறமையான நடிகர் என்பதை இப்படத்திலும் அவர் காட்டியுள்ளார். அவருக்கு இது சாதாரண கதை போல படம் பார்த்த சிலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் அவர் கிடைத்த வேடத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். அவருக்கே உண்டான சில விசயங்கள் இப்படத்திலும் உண்டு.

அவருக்கு ஜோடியாக வரும் பிரியா பவானி சங்கர், ஒரு காட்சியில் பதறிப்போய் தானாக செய்யும் குறும்பான நடிப்பு கொஞ்சம் இண்ட்ரஸ்டிங். விளம்பர வாய்ப்புகள் வந்தால் மிஸ் பண்ணிடாதீங்க பிரியா!

மறைந்த நாடக நடிகர் சீனு மோகனை இப்படத்தில் பார்க்க முடிந்தது கொஞ்சம் மகிழ்ச்சி. இவர் வந்து போகும் சில காட்சிகளில் காமெடிகளும் இயல்பாக இருந்தது. அவருக்கு இப்படம் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கருணாகரன் வழக்கம் போல இப்படத்திலும் இயல்பான நடிப்பு. குறிப்பாக எலிக்கும் இப்படி இரு பவரா என கேட்கும் வசனம், மைண்ட் வாய்ஸ் மற்ற வசனங்கள் படத்தில் காமெடிக்கான இடத்தை நிரப்புகிறது. இருந்தாலும் கருணா நீங்க இன்னும் கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணலாமே!

இயக்குனர் நெல்சன் வெங்கட் வழக்கமான படங்களை போல இல்லாமல் ஒரு சிம்பிளான கதையை அழகான படமாக கொடுத்திருக்கிறார். படத்தில் எலி வில்லனா அல்லது செகண்ட் ஹீரோவா என கேட்க வைக்கிறது. திருவருட்பா, வடலூர் வள்ளலாரை காட்டி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு அவருக்கு நாங்கள் தனியாக வணக்கம் சொல்லவேண்டும்.

படத்திற்கு ஏற்ற பின்னணி இசை, பாடல் என ஜஸ்டின் பிரபாகரன் தனக்கான இடத்தை ஃபில் செய்திருக்கிறார். அதீதமான கிராஃபிக்ஸ்களை காட்டாமல், சிம்பிளாக படத்தை கொஞ்சம் சீரியஸாக்கி கொண்டுபோகிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய்.

எலியால் நாம் கூட வீட்டில் அவதிப்பட்டிருப்போம், ஆனால் இங்கு? அத ஏங்க கேக்குறீங்க! என்கிறது எங்களின் மைண்ட் வாய்ஸ்! ஹா ஹா ஹா, சரி எலிக்கு என்ன ஆச்சு என நீங்கள் கேட்கலாம்! இங்கே நாங்களும் சர்ப்பிரைஸ் வைக்கிறோம். போய் தியேட்டரில் பார்த்துவிட்டு வாருங்கள்….

கிளாப்ஸ்

Sj.சூர்யா முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன்களே வசனம் பேசுகின்றன.

கருணாகரனின் சில கவுண்டர்கள் நிஜத்தை பிரதிபலிக்கின்றன்.

இயக்குனரின் சொல்லும் மெசேஜ், படத்தின் குவாலிட்டியான படைப்பு.

பல்பஸ்

இன்னும் கொஞ்சம் திரில்லிங் சேர்த்திருக்கலாமே இயக்குனரே..

மொத்தத்தில் கோடைகால விடுமுறையில் நம் வீட்டு குழந்தைகளோடு கொஞ்சம் நன்றாக டைம் ஸ்பெண்ட் பண்ணலாம் இந்த மான்ஸ்டர் படத்தில்.

-cineulagam.com