’நேருக்கு நேர் பேசித் தீர்த்துக்கொள்வோம், வாரீகளா’ கிட் சியாங்குக்கு நஜிப் சவால்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் லிம் கிட் சியாங்கை நேருக்கநேர் “கட்டுப்பாடற்ற முறையில் விவாதமிட” தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.

இன்று ஃப்ரி மலேசியா டுடேயில் வெளியியான ஒரு நேர்காணலில் நஜிப் இச்சவாலை விடுத்தார். டிஏபி ஆலோசகர் அமைச்சர் பதவி எதையும் வகிக்கவில்லை என்று குறிப்பிட்ட நஜிப், “ஒவ்வொரு நாளும் அவர் பல அறிக்கைகள் விடுவதைப் பார்க்கையில் விவாதத்தில் கலந்துகொள்ள அவருக்குப் போதுமான நேரம் இருக்கும்” என்றே நம்புவதாகவும் கூறினார்.

“லிம் ஒவ்வொரு முறை அறிக்கை விடும்போதும் அதற்கு நான் பதில் சொல்லி வந்திருக்கிறேன். ஒரு பதிவில் ‘நஜிப் விவகார அமைச்சர்’ என்றுகூட அவருக்குப் பட்டம் சூட்டினேன்.

“எனவே லிம்முடன் விவாதம் செய்வது நல்லதென்றே நினைக்கிறேன்”, என்றவர் ஃப்ரி மலேசியா டுடே-இடம் கூறினார்.

லிம்முடன் எதைப் பற்றியும் விவாதிக்கத் தயார் என்றாரவார்.

“பக்கத்தான் ஹரப்பான் என்னை ஓய்வாய் இருக்க விடுவதே இல்லை. ஆனாலும், லிம் விவாதத்துக்கு வரத் தயார் என்றால் அதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள் நான் தயார்.

“என்னிடம் அவர் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம். 1எம்டிபி பற்றிக்கூட கேட்கலாம். நானும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்பேன். ஆரோக்கியமான ஜனநாயக உணர்வுடன் இச்சவாலை ஏற்க வேண்டும்”, என்று நஜிப் கூறினார்.