பெர்சே : சண்டக்கானில் தேர்தல் குற்றங்கள் குறைந்துள்ளன

அண்மையில், சண்டக்கானில் நடைபெற்ற இடைத்தேர்தலில், தேர்தல் குற்றங்கள் குறைந்துள்ளதாக, தேர்தல் சீர்திருத்த அமைப்பான, பெர்சே கூறியுள்ளது.

தேர்தல் காலத்தில், அரசாங்க சொத்துக்களின் துஷ்பிரயோகம், அரசாங்க சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், வாக்களிக்கும் நாளில் பிரச்சாரம் செய்தது போன்றவை உட்பட, 19 தேர்தல் குற்றங்கள் மற்றும் தவறான நடத்தையை, பெர்சே சபா மாநிலப் பிரிவினர் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், வாக்குப்பதிவு நாளில், பிரச்சார நடவடிக்கைகளைக் கண்டிப்பாக தடை செய்ய வேண்டுமென, தேர்தல் அமலாக்கக் குழுவினர் (பி.பி.கே.பி.ஆர்) மற்றும் தேர்தல் ஆணையம் (இசி) ஆகியவற்றை பெர்சே கேட்டுக்கொண்டது.

பதிவு செய்யப்பட்ட தேர்தல் குற்றங்களில், 11 குற்றங்களை பக்காத்தான் ஹராப்பான், 3 குற்றங்களைப் பிபிஎஸ் மற்றும் 4 குற்றங்களைச் சுயேட்சை வேட்பாளர் மற்றும் பிற கட்சிகள் செய்துள்ளதாக அறிப்யப்படுகிறது.