ஜோகூர் சுல்தானை அவமதித்தாரா முக்ரிஸ்?

கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்மாயிலுக்கும் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்கும் வணக்கம் செலுத்தாமல் அவர்களைக் கடந்து செல்வதைக் காண்பிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயிலின் டிவிட்டர் பக்கத்திலும் அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஜோகூர் நண்பர்கள் வட்டம் , பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் மகனுக்கு ஆணவம் அதிகம் எனக் குற்றம் சாட்டியிருந்தனர்.

சுல்தான் இப்ராகிமும் துங்கு இஸ்மாயிலும் மகாதிரை வரவேற்கும் படங்களையும் ஜோகூர் நண்பர்கள் பதிவேற்றம் செய்திருந்தனர்.

Friends of Johor
@FriendOfJohor
2மனிதர்களுமுள்ள வேறுபாட்டைப் பாருங்கள். ஜோகூர் ஆட்சியாளர் துன் மகாதிருடன் கைகுலுக்குகிறார். ஆனால் முக்ரிஸ் மகாதிர் இஸ்தானா அபு பக்காரில் ஜோகூர் சுல்தானுடன் கைகுலுக்காமல் திமிராக நடந்து கொள்கிறார் என்றவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

14-வினாடி காணொளியில், காலஞ்சென்ற பகாங் ஆட்சியாளர் சுல்தான் அஹமட் ஷா அல்-முஸ்டா’இன் பில்லாவுக்கு இறுதி மரியாதை செலுத்த நேற்று இஸ்தானா அபு பக்காருக்கு வருகை தந்த முக்ரிஸ் அங்கு நின்றிருந்த ஜோகூர் அரசக் குடும்பத்தாரைக் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்வதாகக் காணப்படுகிறது.

இதன் தொடர்பில் முக்ரிசின் கருத்தை அறிய மலேசியாகினி அவரைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறது.