வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் சிஐஏ-க்குத் தகவல் சொல்பவராம்

வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரும் 2017-இல் மலேசியாவில் கொலையுண்டவருமான கிம் ஜோங் உன், அமெரிக்க மத்திய உளவுத் துறை(சிஐஏ)க்குத் தகவல் சொல்லியாக இருந்து வந்தவர் என வால் ஸ்ட்ரிட் ஜர்னல் நேற்று கூறியது.

“தகவல் அறிந்த ஒருவர்” இதைத் தெரிவித்ததாகக் கூறிய வால் ஸ்ட்ரிட் ஜரனல், ஆனால், கிம் ஜோங் நம்முக்கும் சிஐஏ-க்குமிடையில் எப்படிப்பட்ட உறவு நிலவியது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டது.

இச்செய்தியை ராய்ட்டரால் உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. சிஐஏ-யும் அது குறித்துக் கருத்துரைக்க மறுத்து விட்டது.