குளிர் காலத்திற்கு சேமித்து வைத்து சாப்பிட, இவரை வைத்திருந்த கரடி- நெஞ்சை உலுப்பும் உண்மை

ரஷ்யாவில் உள்ள குக்கிராமமான ரூவா என்னும் இடத்தில், அலெக்ஸான்டர் என்னும் இன் நபரை ராட்சச கரடி ஒன்று தாக்கி. அவரது இடுப்பு எலுமை உடைத்து பின்னர் அவரை கவ்விச் சென்று தனது குகைக்குள் 1 மாதமாக வைத்திருந்துள்ளது. இவரால் நடக்க முடியாது என்ற காரணத்தால் தப்பிச் செல்ல முடியாமல். அருகே உள்ள நீரை மட்டும் பருகி கிடைத்தவற்றை உண்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இன் நிலையில் அந்த இடத்திற்கு அருகே வேட்டை நாய்களோடு ஒரு பண்ணையார் சென்றுள்ளார்.

ஆனால் அவரது வேட்டை நாய்கள், அவ்விடம் சென்றதும் வித்தியாசமாக நடந்துகொண்டதோடு. எதனையோ மோப்பம் பிடித்து செல்ல ஆரம்பித்துவிட்டது. உரிமையாளர் தடுத்தும் நாய்கள் கேட்டபாடாக இல்லை.இதனால் ஏதோ நடக்கிறது என்று புரிந்துகொண்ட உரிமையாளர் நாய்களுக்கு பின்னே சென்றுள்ளார்.அது ஒரு குகைக்குள்ளே சென்றுள்ளது. அங்கே அந்த வேளை கரடி இருக்கவில்லை. அது உணவு தேடி வெளியே சென்றுவிட்டது.

எகிப்த்தில் இறந்தவர்களை மண் பூசி மம்மியாக்குவது வழக்கம். இப்படி மண் பூசப்பட்ட உடலோடு மம்மி போல காட்சியளித்துள்ளார் அலெக்ஸாண்டர். இவரை மீட்ட பண்ணைக்காரர், தனது பண்ணை விட்டுக்கு அவரை எடுத்துச் சென்றுள்ளார். 1மாதமாக குகைக்குள் இருந்த மனிதர் கூறும்போது.தன்னை கரடி கொல்லவில்லை என்றும்.குளிர் காலம் தொடங்கிய பின்னர் என்னை கொன்று உணவாக பாவிக்கவே தன்னை சேமித்து வைத்திருந்ததாகவும் நடுங்கிக் கொண்டு கூறியுள்ளார்.

-athirvu.in