டிஎன்பியுடன் மற்றவர்களும் மின்சார விநியோகம் மேற்கொள்ள அனுமதிக்கப்படலாம்

மின்சார விநியோத்தில் புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆலோசிக்கிறது. அதன் தொடர்பில் விரைவில் முடிவு காணப்படும்.

அத்திட்டம் அமலுக்கு வந்தால் தீவகற்ப மலேசியாவில் தெனாகா நேசனல் பெர்ஹாட் மட்டுமே ஏகபோக மின் விநியோக நிறுவனமாக இருக்கும் நிலை முடிவுக்கு வரும்.

“மின் விற்பனையைத் தாராளமயமாக்கும் அப்பரிந்துரையை அமைச்சு ஆராய்ந்து வருகிறது. அதன்வழி பயனீட்டாளர்கள் டிஎன்பி-இடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் மின்சாரத்தை வாங்க முடியும்”, என எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற அமைச்சு ஜூலை 3-இல் நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் கூறிற்று.

விலையில் போட்டியை ஊக்குவிக்க மின் விநியோகம் தாராளமயமாக்கப்படுமா என்று அம்னோ ஜாசின் எம்பி அஹமட் ஹம்சா வினவியதற்கு அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.