இரவில் ஈரான் நாட்டு டாங்கர் கப்பலை எப்படி பிரிட்டன் கமாண்டோக்கள் கைப்பற்றினார்கள் ?

ஈரான் நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதில் ஒன்று அன் நாடு தனது எண்ணையை விற்க்கும் போது, சில கடல் மார்கமாக செல்ல முடியாது என்பதாகும். இதனை மீறி பெருய ஒரு டாங்கர் கப்பல் மூலம் பல்லாயிரம் லீட்டர் மசகெண்ணையை ஏற்றிக்கொண்டு சிரியா நோக்கி விரைந்துள்ளது, ஈரான் நாட்டு கப்பல் ஒன்று. அமெரிக்க சாட்டலைட் கண்காணிப்புக்கு கண்ணில் மண்ணை தூவிவிட்டு புறப்பட்ட இக் கப்பலை, பிரிட்டன் கடல் படையினர் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார்கள்.

இரவு நேரத்தில் குறித்த கப்பலை தடுத்து நிறுத்தி, அதனை கைப்பற்ற திட்டம் ஒன்றை போட்டாது பிரிட்டன் கடல் படை. வெறும் 42 பிரிட்டன் கமாண்டோ படைப் பிரிவினர் மட்டுமே இத்தாக்குதலுக்கு அனுப்பப்பட்டார்கள். இதில் 8 பேர் கொண்ட குழு, கடல்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் கப்பலுக்கு மேல் திடீரென தரை இறங்கி ஒரு இடத்தை முதலில் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். இதனை அடுத்து அதிவேக தாக்குதல் படகில் வந்த 34 பேரும் கப்பல் மீது கயிற்றை போட்டு ஏறினார்கள்.

சில நிமிடங்களில் எல்லாம், ஈரான் நாட்டு சூப்பர் டாங்கர் கப்பல் பிரிட்டன் கடல் படையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. இக் கப்பலில் சுமார் 28 ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்துள்ளார்கள். பாதுகாப்பு அதிகாரிகள், பிரிட்டன் படையினரை நோக்கி சுட்டுள்ளார்கள். இருப்பினும் ஒரு கட்டத்தில் சரணடைந்துவிட்டார்கள். மிகப் பெரிய டாங்கர் கப்பலை தற்போது பாதுகாப்பான ஒரு கடல் பகுதிக்கு நகர்த்தியுள்ள பிரிட்டன், போர் கப்பல் உள்ள பிரதேசத்தில் நிலை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பிரிட்டன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

-athirvu.in