பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீத வரி!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலைப்படை பயங்கவராதி நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களின் மீது 200 சதவீதம் சுங்கவரி விதிக்க மத்திய அரசு தீர்மானித்தது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆலோசனைப்படி, இதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதலைக் கோரி மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

-athirvu.in

TAGS: