அமெரிக்க எல்லைக்குள் அகதிகள் ஊடுறுவதை தவிர்க்க மெக்ஸிக்கோ புது முயற்சி!

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயரும் மக்களை தடுத்தி நிறுத்தி வரும் மெக்ஸிக்கோ அரசு, அவர்களுக்கென தற்காலிக இருப்பிடம் அமைத்து கொடுத்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளில் உணவு, தொழில் இன்றி தவிக்கும் மக்கள், மெக்ஸிக்கோ வழியாக அமெரிக்கா நோக்கி படையெடுக்கின்றனர். அண்மையில் சட்டவிரோத ஊடுறுவலை தவிர்க்கும்படி மெக்ஸிக்கோ அரசுக்கு அறிவுறுத்திய அதிபர் டிரம்ப், புலம்பெயர்வதை தடுக்காவிட்டால் ஏற்றமதி பொருட்களுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.

இந்நிலையில் நெடுந்தூரத்திலிருந்து, உடமைகளின்றி அகதிகளாக வரும் மக்களுக்கென எல்லையில் தற்காலிக கூடாரத்தை மெக்ஸிக்கோ அரசு அமைத்துள்ளது.

அண்மையில், டெக்ஸாஸ் மாகாணம் வரை சென்று பேருந்து ஒன்றில் திருப்பி விடப்பட்ட அகதிகள் சிலர், மெக்ஸிக்கோ எல்லையில் உள்ள சியூடாட் ஜூரேஸ் (Ciudad Juarez) நகருக்கு வந்தடைந்தனர். அவர்களுக்கு அங்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டன.

-athirvu.in