சிறார் மதமாற்றத்துக்குப் பெற்றோர் இருவரின் ஒப்புதல் தேவை- டிஏபி வலியுறுத்து

சிறார்களை இஸ்லாத்துக்கு மதமாற்ற பெர்றோர் இருவரின் சம்மதம் தேவை என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.

“எங்கள் நிலைப்பாடு தெள்ளத் தெளிவானது. நாங்கள் கூட்டரசு அரசமைப்பையும் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பையும் பின்பற்றுகிறோம் அவை சிறார் மதமாற்றத்துக்கு பெற்றோர் இருவரது ஒப்புதலும் தேவை என்று கூறுகின்றன”, என லிம் ஊடகங்களிடம் கூறினார்.

“கூட்டரசு அரசமைப்பு சிறார்க்குப் பாதுகாப்பு அளிப்பதை நாம் மதிக்க வேண்டும்”, என்றாரவர்.

சிலாங்கூரில் மதமாற்ற விவகாரம் தொடர்பில் சர்ச்சை மூண்டுள்ள வேளையில் ஒருதலைப்பட்ச மதமாற்றுக்கு வழிகோலும் சட்டவரைவைத் தாக்கல் செய்ய முடியாதபடி சட்டமன்றக் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதற்காகக் குறைகூறப்படும் சட்டமன்றத் தலைவர் இங் சுவி லிம்மை டிஏபி இறுதிவரை தற்காக்கும் என்றும் லிம் சூளுரைத்தார்.