இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை- அமெரிக்கா!

காஷ்மீர் தொடர்பான தங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ், பாங்காக்கில் நடந்த ஆசியான் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதி யாகப் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசியதாக கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தானால் தங்களுக்கு பெருமளவு தேவைகள் நிறைவேறுவதாகவும் குறிப்பிட்டார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவின் முடிவை தாங்கள் மதிப்பதாகவும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை என்று மோர்கன் ஆர்டகஸ் கூறியிருப்பது இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

-athirvu.in