Parle பிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: “ஆட்டோமொபைல் தொடங்கி சில்லறை வணிகம் வரை சரியும் இந்தியப் பொருளாதாரம்”

பிரபல பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, விற்பனை சரிவின் காரணமாக 10,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பிஸ்கட்டுகளுக்கான வரி 12 சதவீதம் இருந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பின்னர் 18 சதவீதமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்கட்டுகளுக்கான வரி 12 சதவீதம் இருந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பின்னர் 18 சதவீதமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியா சமீப காலமாக ஆட்டோமொபைல் தொடங்கி சில்லறை வணிகம் வரை பல துறைகளில் மந்தநிலையை சந்தித்துள்ளது. இதனால் நிறைய தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது. புதிதாக வேலை வாய்ப்புகளும் வழங்கபடுவதில்லை. ஆட்டோமொபைல் துறையோ சரிவிலிருந்து மீள மத்திய அரசு சிறப்பு நிதியை அளிக்க வேண்டும் எனக் கோருகிறது.

பார்லே மட்டுமல்ல இந்த மாத தொடக்கத்தில் ப்ரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடடின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கவும் இருமுறை யோசிக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

TAGS: