அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்துகிறது இரான்

அணு ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் அனைத்து எல்லைக் கோடுகளையும் இரான் நீக்க இருக்கிறது. 2015 அணு ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறி மீண்டும் நடவடிக்கை எடுத்திருக்கிறது இரான்.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்த மையநீக்கிகளை உருவாக்க தொடங்கிவிட்டதாக அந்நாட்டுத் தலைவர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, மீண்டும் இரான் மீது பொருளாதார தடைகள் விதித்தது.

அதற்கு பதிலடியாக ஏற்கனவே ஒப்பந்த உடன்படிக்கைகளை இரான் இருமுறை மீறிவிட்டது.

3.5 சதவீதம் அளவிற்கு குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுஉலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம். ஆனால் 90 சதவீதம் அளவிற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும்.

ஆனால், அமைதியான சூழலுக்கான நோக்கத்திலேயே அணு திட்டத்தை செயல்படுத்துவதாக இரான் மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. -BBC_Tamil