மெக்சிகோ: கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 44 உடல்கள் – என்ன நடந்தது?

தடயவியல் துறை வல்லுநர்கள் மெக்சிகோவில் உள்ள ஜலிஸிகோ மாநிலத்திலிருந்து 44 உடல்களைக் கண்டெடுத்து உள்ளனர்.

அந்த கிணற்றிலிருந்து மனித உடல்களின் சிதிலங்கள் 119 கறுப்புப் பையிலிருந்து எடுத்துள்ளனர். கிணற்றிலிருந்து துர்நாற்றம் அடிக்கிறது என அதன் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் புகார் அளித்தனர்.

ஜலிஸிகோ மாநிலமானது மெக்சிகோ நாட்டின் மத்தியில் உள்ளது.

மனித உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது. இவை யாரது உடல் பாகங்கள் என அடையாளம் காணப்படவில்லை.

அந்தப் பகுதியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், உடல் பாகங்களை அடையாளம் காணப்படச் சிரமமாக உள்ளதால் தடயவியல் நிபுணர்கள் அனுப்புமாறு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

-BBC_Tamil