அமேசான் காடு அமைந்துள்ள நாடான பிரேசிலில் மீண்டும் ஒரு சூழலியல் கேடு:கடற்கரை முழுவதும் எண்ணெய்

பிரேசில் வட கிழக்கு கடற்கரையில் பெரிய அளவில் எண்ணெய் சிந்தி உள்ளதை அடுத்து இது தொடர்பாக விசாரணையை அந்நாடு முடுக்கி உள்ளது. அந்த எண்ணெய்யைப் பரிசோதித்ததில் இவை அந்நாட்டில் தயாரிக்கப்பட்டது இல்லை எனத் தெரியவந்துள்ளது. மீன்களுக்கு இவை சேதம் உண்டாக்கியதா எனத் தரவுகள் இல்லை. ஆனால், இப்போது வரை ஆறு கடல் ஆமைகள் மற்றும் ஒரு கடற்பறவை இறந்துள்ளது.

பிரேசில் நாட்டில் மீண்டும் ஒரு சூழலியல் கேடு, கடற்கரை முழுவதும் எண்ணெய் - என்ன நடந்தது?படத்தின் காப்புரிமைSERGIPE STATE GOVERNMENT
பிரேசில் நாட்டில் மீண்டும் ஒரு சூழலியல் கேடு, கடற்கரை முழுவதும் எண்ணெய் - என்ன நடந்தது?படத்தின் காப்புரிமைSERGIPE STATE GOVERNMENT

எண்ணெய் கொட்டிய பகுதிகளில் துப்புரவு பணிகள் தொடங்கி உள்ளன. மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ரியோ கிராண்டி டூ நோர்டி மாகாணத்தில் நிலைமை சீராக உள்ளதாகவும், அமேசான் மழைக் காடு அமைந்துள்ள மரேனோ பகுதியிலும் இந்த எண்ணெய் சிந்தி உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

-BBC_Tamil