உத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்

பல ஆண்டுகளாக நிதிப் பிரச்னையால் தடுமாறிக் கொண்டிருந்த மலாய்மொழி நாளேடான உத்துசான் மலேசியா இன்றுடன் அதன் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும். அதன் பணியாளர்கள் அனைவருக்கும் வேலைநீக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

உத்துசான் நிர்வாகம் பணியாளர்களுக்காக விடுத்திருந்த சுற்றறிக்கை ஒன்று மிங்குவான் மலேசியா, கோஸ்மோ ஆகியவையும்கூட மூடப்படுவதாக தெரிவித்தது.

அந்த 80ஆண்டுக்கால பத்திரிகையைத் தூக்கி நிறுத்த எவ்வளவோ முயன்றும் அதற்கான பண வசதி இல்லாமல் போவிட்டது என உத்துசான் மலாயு (மலேசியா) பெர்ஹாட் செயல்முறை தலைவர் அப்துல் அசீஸ் ஷேக் பாட்சிர் அந்த அறிக்கையில் கூறினார்.

“எனவே 2019 அக்டோபர் 9 புதன்கிழமை நிறுவனத்தின் செயல்பாடு முடிவுக்கு வருகிறது”, என்றாரவர்.

பணியாளர்கள் இன்று வேலையை முடித்துக்கொண்டு நிறுவன அடையாள அட்டைகள், சாவிகள் உள்பட நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள்களை பிற்பகல் மணி 1-க்குள் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

உத்துசான் 1939-இல் வெளியிடப்பட்டது. முதலில் ஜாவி எழுத்தில்தான் வெளிவந்தது. 1959-இல்தான் அது ரோமன் எழுத்து வடிவத்துக்கு மாறியது.

2012-இலிருந்து அது நட்டத்தில்தான் நடந்து வந்தது