பேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும் இல்லை

பேராக்கில் திடீர் தேர்தல் நடகக்ப் போவதாகவும் கட்சித்தாவல்கள் நிகழப் போவதாகவும் உலவி வந்த வதந்திகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

மாநிலத் தேர்தலுக்காக பள்ளிகளின் நிலையைப் பார்வையிட்டு வருவதாக இணையத்தளத்தில் உலவும் ஊகங்களைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

பள்ளிகளைப் பார்வையிடல் ஒரு வழக்கமான பணிதான் என்று இசி தலைவர் அஸ்ஹார் ஹருன் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி அப்பணி நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.

“பள்ளிகள் வாக்களிப்பு மையங்களாக செயல்பட பொருத்தமாக உள்ளன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவ்வாறு செய்யப்படுகிறது”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

நேற்றிலிருந்து உலவிவரும் வதந்திகள் பேராக் டிஏபியின் மாலிம் நவார் மற்றும் பொக்கோக் ஆசாம் சட்டமன்ற உறுப்பினர்கள் லியோங் சியோக் கெங்கும் லியோ தை ஈயும் கட்சியிலிருந்து விலகப் போவதாகவும் கூறின.

ஆனால், லியோங் அதை மறுத்தார்.

“கட்சியிலிருந்து விலகுவது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் அது குறித்து விவாதித்ததே இல்லை. நான் இன்னமும் டிஏபி-இல்தான் இருக்கிறேன். அவரும் (லியோ) அப்படித்தான் என்று நம்புகிறேன்”, என்றவர் சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.