“கேள்வி கேட்பதற்காக” கம்போடிய தலைவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்- சைபுடின் அப்துல்லா

மலேசிய அதிகாரிகள் கம்போடிய எதிர்கட்சி உதவித் தலைவர் மூ சோசுவா-விடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறார்களே தவிர அவரைக் கைது செய்யவில்லை என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார்.

கம்போடிய பிரதமர் ஹன் சென்னுக்கு எதிரானவர்களைக் கைது செய்யும்படி கம்போடியா மலேசிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தததாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

“அதிகாரிகள் அவரிடம் கேள்வி கேட்க விரும்புகிறார்கள், அவ்வளவுதான்.

“இங்கு வந்ததன் நோக்கத்தை அவர் அறிய விரும்புகிறார்கள் போலும். விஸ்மா புத்ராவைப் பொருத்தவரை அது மக்களை நாடு கடத்தும் நிலையில் இல்லை, அதை நாம் விரும்புவதும் இல்லை”, என்றாரவர்.