அன்வார்: ஹரப்பானில் ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது

பக்கத்தான் ஹரப்பானில் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஒத்துழைப்பு வலுவாக உள்ளதாகக் குறிப்பிட்ட பிகேஆர் தலைவர் அன்வார் இpராகிம் கூட்டணி தமக்களிக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கூட்டணியில் உள்ள பங்காளிகளை நண்பர்களாகக் கருதுவதாக அன்வார் கூறினார். எல்லாரோம் 14வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற ஒன்றித்துப் போரிட்டவர்கள். அந்த ஒத்துழைப்பு உணர்வு இப்போது மக்களுக்கு நன்மை செய்யப் பயன்பட வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.

“பிரதமரை (டாக்டர் மகாதிர் முகமட்டை) ஆதரிக்கிறேனே ஆமாம் . நாடு அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் சுமூகமாக நடந்தேறும். அதே வேளை, மக்களுக்கு நன்மையளிக்குக்கூடிய விசயங்களை உரக்க எடுத்துரைக்கத்தான் வேண்டும்”, என்றார்.

அடிக்கடி வறுமை விவகாரம் பற்றிப் பேசுவது குறித்து விளக்கிய அவர், வறுமையை இனம், சமயம் , ஆண்-பெண், இருப்பிடம் என்ற வேறுபாடு பாராது ஒழிக்க வேண்டும் என்றார்.

மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பது ஹரப்பான் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

அன்வார் நேற்றிரவு கெர்டாவில், பகாங் பிகேஆர் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.