அம்னோ-பாஸ் கூட்டணி அதற்கென ஒரு பிரதமர் வேட்பாளரை நியமிக்கும்

அம்னோவும் பாஸும் அமைத்துக்கொண்டுள்ள முவாஃபக்காட் நேசனல் கூட்டணி 15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் என்று அம்னோ உதவித் தலைவர் காலிட் நோர்டின் கூறினார்.

“இன்றிருக்கும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்குப் பதிலாக மாற்று அரசாங்கம் அமைக்கும் நிலையில் உள்ள முவாஃபக்காட் நேசனல் பிரதமர் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது அவசியமாகும்”. அடுத்த மாதம் நடைபெறவுள்ள அம்னோ பேரவைக் கூட்டம் தொடர்பில் மலேசியாகினிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் நோர்டின் அவ்வாறு கூறினார்.

என்றாலும் முவாஃபக்காட்டின் பிரதமராக யாரை நியமிக்கலாம் என்று விவாதிப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றும் முன்னாள் ஜோகூர் மந்திரி புசார் கூறினார்.

அதேவேளை, சில தரப்புகள் முன்மொழிந்திருப்பதுபோல் முன்னாள் பிரதமர் நஜிப்து அப்துல் ரசாக்கே அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்பதையும் அவர் மறுக்கவில்லை.