பிகேஆர் இளைஞர் பூசல் தெருச் சண்டையாக மாறியது

பிகேஆர் இளைஞர் காங்கிரசில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றி இன்று பிற்பகல் அது தெருச் சண்டையாக மாறியது.

பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் நடைபெறும் மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில்தான் சச்சரவு தொடங்கியது. இந்த வாக்குவாதம் நண்பகல் வாக்கில் மண்டபத்துக்கு வெளியிலும் தொடர்ந்து. வாய்ச் சண்டை கைகலப்பாக மாறியது.

கற்களும் வீசி எறியப்பட்டன. அப்படி எறியப்பட்ட கற்களில் ஒன்று ஒருவரின் மண்டையைப் பிளந்தது.

போலீசார் தலையிட்டு நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுத்தனர். காயமடைந்தவரையும் மருத்துவ சிகிச்சை பெற அழைத்துச் சென்றனர்.

இன்று காலை , பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தின் முன்னாள் நிரந்தரத் தலைவர் மிர்சான் அட்லி முகம்மட் நோரும் அவரின் ஆதரவாளர்களும் மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அங்கு சச்சரவு மூண்டது. அதன் தொடர்ச்சிதான் இந்தத் தெருச் சண்டை.