முகைதின்: சினமூட்டும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்

உள்துறை அமைச்சு பொது அமைதியையும் தேசிய நல்லிணக்கதையும் கெடுக்கும் முயற்சிகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது என அதன் அமைச்சர் முகைதின் யாசின் எச்சரித்துள்ளார்.

அண்மையில் நடந்துள்ள மூன்று நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டினார். ஜாலோர் கெமிலாங் தப்பாகக் காண்பிக்கப்பட்டது, நெகரா கூ வேறு மொழிகளில் பாடப்பட்டது, ஹட் யாய் அமைதி ஒப்பந்தத்தை நினைவுகூரும் நிகழ்வு ஆகியவையே அம்மூன்றுமாகும்.

“அவை மீது பல காணொளிகள் வெளிவந்துள்ளன. மலேசியர்களைச் சினமுறச் செய்யும் அறிக்கைகளையும் செயல்களையும் தவிர்க்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

“இது ஆரோக்கியமற்ற போக்கு. வேண்டுமென்றே சினமூட்டி நிலைமையை மோசமாக்கும் செயல்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.