Pak Li மருந்து பிளாஸ்டரில் நச்சுப்பொருள்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Pak Li மருந்து பிளாஸ்டரில் diphenhydramine. எனப்படும் நச்சுப்பொருள் இருப்பதால் பொதுமக்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்துகிறது.

அதில் diphenhydramine. சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 5 ஆம் நாள் அப்பொருளின் பதிவு இரத்துச் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

diphenhydramine என்பது ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்து. மருத்துவர் அல்லது மருந்தாளுனர் அனுமதியுடன்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்றாரவர்.