கிமானிஸ் இடைத் தேர்தல்: 70 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என இசி எதிர்பார்க்கிறது

தேர்தல் ஆணையம் கிமானிஸ் இடைத் தேர்தலில் 70 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களிப்பார்கல் என எதிர்பார்க்கிறது.

இன்று காலை அந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுக்கு வந்தது. அது பார்டி வாரிசான் சாபா(வாரிசான்)-வின் கரிம் பூஜாங்குக்கும் பாரிசான் நேசனல்( பிஎன்) முகம்மட் அலாமினுக்குமிடையிலான நேரடிப் போட்டிதான் என்பது உறுதியாகி விட்டது.

கரிம்,67, வாரிசான் கிமானிஸ் தொகுதித் தலைவர், முகம்மட் அலாமின், 48, கிமானிஸ் அம்னோ தொகுதித் தலைவர்.

கிமானிஸ் வாக்காளர்கள் அவர்களின் வாக்களிக்கும் உரிமையைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இசி தலைவர் அஸ்கார் அசிசான் கேட்டுக்கொண்டார்.