கொரோனா வைரஸ்: ஜோகூர் பாரு ஹோட்டலில் எட்டு சீன நாட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் – பெர்னாமா

சிங்கப்பூரிலிருந்து நேற்று ஜோகூர் பாருவுக்கு வந்த எட்டு சீனர்கள், சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார்.

அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான வுஹானைச் சேர்ந்த 66 வயதான சீன நாட்டவரின் சக பயணிகள் ஆவர். சிங்கப்பூரில் நேற்று உறுதி செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்பாளர் இவர் ஆவார். அந்த நபர் திங்கள்கிழமை சிங்கப்பூர் வந்தார்.

கொரோனா வைரஸுக்கு பாதிப்புற்ற நோயாளியுடன் அவர்கள் தொடர்பு கொண்டிருந்ததால், வைரஸின் அறிகுறிகளை உருவாக்குகிறார்களா என்பதை தீர்மானிக்க எட்டு பயணிகளும் குறைந்தது ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றார் டாக்டர் லீ. இதுவரை அந்த பயணிகள் இதுபோன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை.

சிங்கப்பூரிலிருந்து ஈப்போவின் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் இன்று விமானம் வருவதைக் கண்டு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பயணிகளின் உடல் வெப்பநிலையை அளவிட பயன்படும் கூடுதல் உபகரணங்கள், அனைத்து விமான நிலையங்களிலும், நாட்டிற்குள் நுழையும் இடங்களிலும் வைக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான மேலும் இரண்டு நபர்களை உறுதிப்படுத்தியுள்ளது.

அதில், வுஹானில் இருந்து 53 வயதான ஒரு சீன நாட்டு பெண்மணி செவ்வாயன்று தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் வந்தார். தற்போது அவர் தேசிய தொற்று நோய்களுக்கான ஒரு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது நபர் வுஹானைச் சேர்ந்த 37 வயதான சீன நாட்டவர், வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட முதல் நபரின் மகன் இவர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, 53 வயதான நோயாளி 8 டவுன்ஷெண்ட் சாலையில் உள்ள ஜே 8 ஹோட்டலில் (J8 Hotel in 8 Townshend Road) தங்கியிருந்தார், மேலும் அவர் ஆர்ச்சர்ட் சாலை (Orchard Road), மெரினா பே சாண்ட்ஸ் அண்ட் கார்டன்ஸ் பை தி பெய் (Marina Bay Sands and Gardens by the Bay) மற்றும், எம்ஆர்டி (MRT) மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ததாகவும் சுட்டிக்காட்டினார்.