OPS Selamat – 7 நாட்களுக்குள் 12,000 விபத்துக்கள்

சீனப் புத்தாண்டு முன் தொடங்கிய OPS Selamat 16/2020-ன் ஏழாவது நாளில் 17,901 வாகனங்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 11,788 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. OPS Selamat 16/2020 ஜனவரி 18-ல் தொடங்கியது.

அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன (3,611 பதிவுகள்), ஜொகூர் (1,824 பதிவுகள்), கோலாலம்பூர் (1,432 பதிவுகள்) மற்றும் பினாங்கு (978 பதிவுகள்) பதிவாகியுள்ளதாக புக்கிட் அமன் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் அஜிஸ்மான் அலியாஸ் தெரிவித்தார்.

“இந்த முறை OPS Selamat-ன் போது பதிவான 97 அபாயகரமான விபத்துகளில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பின்னிருக்கைபயணிகளும் அதிக எண்ணிக்கையில் அதாவது 71 பேர் இறந்துள்ளனர்” என்று கோலாலம்பூரில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதோடு, மொத்தம் 178,906 சம்மன்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் 110,872 சம்மன்கள் ஆறு முக்கிய குற்றங்கள் சம்பந்தப்பட்டதாகவும் கூறினார். அதில், வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசியை பயன்படுத்துதல்; சமிக்ஞையை பின்பற்றாதவர்; வேக வரம்பை மீறி ஓட்டுதல்; அவசர பாதைகளைப் பயன்படுத்துதல்; சாலை கோட்டு வரிசையை வெட்டிதல்; மற்றும் இரட்டை கோடுகளில் வெட்டுதல்.

ஜனவரி 18-ல் தொடங்கிய OPS Selamat 16/2020, பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீடிக்கும்.

  • பெர்னாமா