Tahfiz கொலை வழக்கு

2017-இல் கோலாலம்பூரில் உள்ள Pusat Tahfiz Darul Quran Ittifaqiyah / தஹ்ஃபிஸ் டாருல் குர்ஆன் இட்டிஃபாக்கியா மையத்தில் வசித்து பயின்றுவந்த 23 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டு அவன் தன் தரப்பு வாதத்தை வழங்க ஆணையிடப்பட்டது.

உடன் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு இளைஞன் அதே கொலையில் இருந்து விடுவிக்கப்பட்டான். விடுவிக்கப்பட்ட அவ்விளைஞன் குற்றவாளிக் கூண்டிலிருந்தபடியே கண்ணீர் சிந்துவதைக் காண முடிந்தது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி அஸ்மான் அப்துல்லா தீர்ப்பை வழங்கியபோது இருவரும் குற்றவாளிக் கூண்டில் காவலில் இருந்தனர்.

“எல்லா பெற்றோர்களைப் போல, அவர் ஒரு சிறந்த மனிதராக மாற வேண்டும் என்பதே எனது ஆசை,’ என்றார் 23 பேரின் மரணம் தொடர்பாக விடுவிக்கப்பட்ட இளைஞனின் தந்தை.

“எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தை ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் என் மகனுக்கு என்ன நேர்ந்தது என்பது விதி. அவர் விடுவிக்கப்பட்டதற்கு அல்லாஹ்வுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இதற்குப் பிறகு, அவர் ஒரு சிறந்த மனிதராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று 56 வயதான தந்தை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

சம்பவத்தின் போது இரு நண்பர்களுக்கும் 16 வயது. 23 பேரை கொலை செய்ததற்காக அவ்விருவரும் குற்றம் சாட்டப்பட்டனர். செப்டம்பர் 14, 2017, கோலாலும்பூரில் உள்ள ஜாலான் கெரமாட் ஹுஜுங், கம்புங் டத்துக் கெரமாட், வாங்ஸா மஜுவில் உள்ள தஹ்ஃபிஸ் மையத்தில் அதிகாலை 4.15 மணி முதல் காலை 6.45 மணிக்கு இக்குற்றத்தை புரிந்துள்ளனர்.

அவர்கள் மீது தலா 23 கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, Penal Code சட்டத்தின் 302 பிரிவின் கீழ் மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 34-ம் சேர்ந்து வாசிக்கப்பட்டன. இது மரண தண்டனையை வழங்குகிறது.

எவ்வாறாயினும், நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா விடுவிக்கப்பட்ட இளைஞனின் நண்பனை தன் தரப்பு வாதத்தை வழங்க உத்தரவிட்டார்.