ஜனநாயகக் குறியீட்டில் மலேசியா சிறந்த இடத்தைப் பிடித்ததுள்ளது

ஜனநாயகக் குறியீட்டில் மலேசியா சிறந்த தரவரிசையை அடைந்துள்ளது. மொத்தம் 167 நாடுகளில், மலேசியா 43வது இடத்தைப் பிடித்ததுள்ளது.

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (ஈஐயு)/Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ள 2019 ஜனநாயக குறியீட்டு அறிக்கையில், மலேசியாவிற்கு அதிகபட்ச 10 மதிப்பெண்களிலிருந்து 7.16 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து மலேசியா 5.98 முதல் 6.88 வரையிலான மதிப்பெண்ணை பெற்றிருந்தது. கடந்த ஆண்டு இது 6.88 மதிப்பெண்களுடன் 52வது இடத்தைப் பிடித்தது.

மலேசியா தனது அண்டை நாடுகளை காட்டிலும் மேல்நிலையில் உள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

2018 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்திய ‘போலி செய்தி’ சட்டத்தை (fake news’ law) ஆகஸ்ட் 2018-இல் ரத்து செய்த மலேசியா, 2019-இல் மேலும் தன் ஜனநாயகத்தை வலுப்படுத்தியது.

“அதன் மதிப்பெண் மேம்பட்டு உலக தரவரிசையில் மலேசியா ஒன்பது இடங்களுக்கு உயர்ந்தது. எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் பிரச்சார வாய்ப்புகள் வளங்கப்படுதல், மற்றும் குறிப்பாக சமூக ஊடக உலகில் மேன்மையடைதல்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்த ஜனநாயகக் குறியீடு/The Democracy Index, உலகில் ஜனநாயகத்தின் நிலையை அளவிடும் ஒரு முயற்சியாக திகழ்கிறது. இது தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைவாதம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் மக்கள் சுதந்திரம்/உரிமை ஆகிய ஐந்து பகுதிகளை அளவிடுகிறது.

மலேசியா தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவத்தில் அதன் மதிப்பெண்ணில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இதில் அதிகபட்ச 10 மதிப்பெண்களில் 9.17-ஐப் பெற்றது. 2018-ஆம் ஆண்டில் இதில் 7.75 மதிப்பெண்களை மட்டுமே பெற்றது.

அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கான மதிப்பெண் (7.86), அரசியல் பங்கேற்பு (6.67), அரசியல் கலாச்சாரம் (6.25) மற்றும் மக்கள் சுதந்திரம்/உரிமைகள் (5.88)

ஒட்டுமொத்த தரவரிசையில் மலேசியா இன்னும் “குறைபாடுள்ள ஜனநாயகம்” பிரிவில் தான் உள்ளது. ஆனால் இது முதல் முறையாக தரவரிசையின் மேல் பாதி பகுதிக்கு நகர்ந்துள்ளது. மலேசியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசுடன் / Republic of Trinidad and Tobago சம நிலையில் உள்ளது.

அதே பிரிவின் அடிப்பகுதியில் சிங்கப்பூர் உள்ளது. இது 6.02 மதிப்பெண்களுடன் 75 வது இடத்தில் ஹாங்காங்குடன் சம நிலையில் உள்ளது. மெக்ஸிகோ மற்றும் பப்புவா நியூ கினி ஆகியவை முறையே 73 வது மற்றும் 74 வது இடத்தில் உள்ளன.

குறைபாடுள்ள ஜனநாயக பிரிவில் சிறந்த நாடுகளில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

எட்டுக்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடுகள் “முழு ஜனநாயகம்/full democracy” பிரிவில் சார்ந்தும், ஆறு முதல் எட்டு வரை மதிப்பெண் பெற்ற நாடுகள் “குறைபாடுள்ள ஜனநாயகம்”/flawed democracy பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளன.

ஆறு முதல் நான்கு வரையிலான மதிப்பெண் ஒரு நாட்டை “கலப்பின ஆட்சி”/hybrid regime பிரிவில் வைக்கும். நான்குக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற நாடுகள் “சர்வாதிகார”/authoritarian பிரிவில் வைக்கப்படும்.

நோர்வே, ஐஸ்லாந்து, சுவீடன், நியூசிலாந்து மற்றும் பின்லாந்து ஆகியவை “முழு ஜனநாயகம்” பெற்று முதலிடத்தில் உள்ளன.