மலேசியாவின் முதல் இந்து அடைவு (Hindu Directory) பினாங்கில் தொடங்கப்பட்டது

மலேசியா வடக்கு பகுதியுலுள்ள இந்து கோவில்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் (NGO) தொடர்புகளைக் கொண்ட இந்து அடைவை (Hindu Directory) பினாங்கு மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், உணவு, கல்வி, மருத்துவ சேவைகள் மற்றும் பல சேவைகளை இலவசமாக வழங்கும் விபரங்களை உள்ளடக்கியுள்ளது.

பினாங்கு இந்து சங்கம் / Penang Hindu Association (PHA), பினாங்கு இந்து எண்டோமென்ட்ஸ் போர்டு / Penang Hindu Endowments Board (PHEB), உலகளாவிய இந்து கூட்டமைப்பு / Global Hindu Federation மற்றும் பிற உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்
ஆதரவுடன், சுவாமி பிரம்மநந்த சரஸ்வதி அவர்கள் இத்தரவின் 10,000 பிரதிகள் வெளியிட்டுள்ளார். இது பிப்ரவரி 7 மற்றும் 8 தேதிகளில் தைப்பூசத்தின் போது முருகன் கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள தண்ணீர் பந்தலில் விநியோகிக்கப்படும்.

திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரசாந்த் சுப்பிரமணியன் கூறுகையில், இந்து கோவில்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கும் இலவச சேவைகளை அனைத்து சமூகங்களுக்கும், குறிப்பாக ஏழை மற்றும் பி40 குடும்பங்களுக்கு தெரிவிப்பதற்கு இந்த முயற்சி உள்ளது என்றார்.

மக்களுக்கு வழங்கப்படும் அல்லது தேவைப்படும் இலவச சேவைகளைப் பற்றியும், இந்து கோவில்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இடம், செயல்பாட்டு நேரம் மற்றும் தொடர்பு விவரங்கள் குறித்தும் ஒருங்கிணைக்கப்பட்ட அடைவு எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

“இந்த சேவைகளில் இலவச உணவு, இலவச கல்வி வகுப்புகள் மற்றும் இலவச மருத்துவ உதவியும் அடங்கும். ஒது இந்து சமூகங்கள் மட்டுமல்லாமல், அகதிகள், இந்திய-முஸ்லிம்கள், சீனர்கள் என்று அனைவரும் இந்த சேவைகளைப் பெற முடியும்” என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். அனால், வழங்கப்படும் இலவச மத மற்றும் ஆன்மீக வகுப்புகள் முதன்மையாக இந்துக்களுக்கு மட்டுமே என்றும் தெரிவித்தார்.

பினாங்கு, கெடா மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 15 கோயில்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல் இந்து அடைவின் முதல் பதிப்பாகும். ஒது புதுப்பிக்கப்பட்டு மலேசியா முழுவதும் விரிவாக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் ஒரு வலைத்தளத்தின் மூலமாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் அணுகலாம் என்றும் அவர் கூறினார்.

“கோப்பகத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றன. கோப்பகத்தின் ஆன்லைன் பதிப்பு ஆறு மாத காலத்திற்குள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.