தைப்பூசப் பண்டிகையின் போது மது விற்பனை தடைக்கு அழைப்பு

பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது மதுபானம் மற்றும் பீர் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பல குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

திருவிழா பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்திற்குள் மதுபானங்களை தடை செய்ய வேண்டும் என்று மலிவு விலை மதுபான எதிர்ப்பு இயக்கத் தலைவர் (Anti-Cheap Liquor Movement) டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

“இது ஒவ்வொரு ஆண்டும் மதுபானம் காரணமாக நடக்கும் இளைஞர்களிடையிலான சண்டை உள்ளிட்ட தொந்தரவுகள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க உதவும்” என்று டேவிட் மலேசியாகினியிடம் கூறினார்.