PPSMI – ஆய்வுக்குப் பின் தாக்கல் செய்யப்படும்

PPSMI அமலாக்கத்தை ஆரய்ந்தபின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்

ஆங்கில மொழியில் அறிவியல் மற்றும் கணிதத்தின் போதனைகளை அமல்படுத்துவது குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் பரிந்துரை, கல்வி அமைச்சினால் ஆய்வு செய்யப்படும்.

கல்வி அமைச்சின் ஒரு அறிக்கையில், பிரதமரின் பரிந்துரையை வரவேற்றாலும், இதை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு ஆய்வுசெய்து அமைச்சரவை முன் தாக்கல் செய்யப்படும்.

ஆங்கில மொழியில் அறிவியல் மற்றும் கணிதத்தை கற்றல் கற்பிப்பதும் செயல்படுத்துவதும் தேசிய கல்வி முறையில் புதியதான ஒன்றல்ல.

கல்வி அமைச்சு 2012-ல் PPSMI அதை ஒழித்திருந்தாலும், 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை மொழி திட்டம் (டி.எல்.பி)/ Dual Language Programme (DLP), ஆங்கில மொழியில் அறிவியல் மற்றும் கணிதத்தின் கற்றல் கற்பித்தலை செயல்படுத்த பள்ளிகளுக்கு வாய்ப்பை அளிக்கிறது.

“ஜனவரி 2020-ள், நாடு முழுவதும் 2,292 பள்ளிகள் DLP-யை செயல்படுத்தியுள்ளன”, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆங்கில மொழியில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பிக்கும் முக்கியத்துவம் குறித்து கல்வி அமைச்சராக இருக்கும் டாக்டர் மகாதீர் தனது கருத்துக்களை தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆங்கில மொழியில் அறிவியல் மற்றும் கணித கற்பித்தலை மீண்டும் செயல்படுத்தலாமா என்று அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருவதாகவும், பெரும்பான்மை அமைச்சரவை உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.