விரிவாக்கப்பட்ட mySalam திட்டம் 8 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும்

புத்ராஜயா (பிப்ரவரி 11): போலியோ உள்ளிட்ட ஒன்பது முக்கியமான நோய்களை உள்ளடக்கி பொது சுகாதார பாதுகாப்பு திட்டம் மைசலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது முன்பு 36 நோய்களிலிருந்து இப்போது 45 நோய்களாகளுக்கான பாதுகாப்பாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறை.

இந்த திட்ட விரிவாக்கத்தில் பெறுநரின் வயதும் 55-ல் இருந்து 65-க்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது, தனித்து வாழும் பந்துவான் சாரா ஹிடுப் (பி.எஸ்.எச்)/Bantuan Sara Hidup (BSH) பெறுநர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இந்த திட்டம் ஆண்டு வருமானம் RM100,000 மற்றும் அதற்கும் குறைவாக உள்ள M40 குழுவிற்கும் விரிவாக்கப்பட்டுள்ளது என்றார். ஆண்டு ஒன்றுக்கு, ஒரு லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் 18-டிலிருந்து 65 வயதிற்கு உட்பட்டவர்கள், இன்று, செவ்வாய்க்கிழமை முதல், மார்ச் 31-ஆம் தேதி வரையில், MYSALAM-மில் பதிந்துக் கொள்ளலாம்.

இந்த பாதுகாப்பில் அரசு மருத்துவமனை, பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு RM4,000 தொகையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்சம் 14 நாட்களுக்கு தினசரி தொகை RM50ம் வழங்கப்படும்.

“இந்த திட்டத்தின் விரிவாக்கம் ஆண்டு இறுதிக்குள் சுமார் எட்டு மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது,” என்று லிம் இன்று இங்கு விரிவாக்கப்பட்ட மைசலம் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது கூறினார்.

இந்த திட்டம் முன்பு 36 சிக்கலான நோய்களுக்கு இரண்டு வகையான சலுகைகளை வழங்கியது. இதன் மூலம் பெறுநர்கள் RM8,000 தொகையும், அரசு மருத்துவமனை, பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் 14 நாட்களுக்கு தினசரி தொகை RM50ம், அல்லது வருடாந்திர தொகையாக RM700 வழங்கப்பட்டது.

BSH பதிவு முடிவடைந்த பின்னர், தகுதியான BSH தனிநபர் பெறுநர்கள் மற்றும் ஊனமுற்றோர் இந்த ஆண்டு மே முதல் தங்கள் விண்ணப்பத்தைச் செய்யலாம் என்று லிம் கூறினார்.

M40 குழுவில் உள்ள நபர்களுக்கு, பதிவு இன்று தொடங்கி மார்ச் 31 வரை நீடிக்கும், என்றார்.

மைசாலத்திற்கு ஒதுக்கப்பட்ட RM2 பில்லியன் போதுமானதா என்று கேட்கப்பட்டதற்கு, இது போதுமானதை விட அதிகமாக உள்ளது என்று லிம் கூறினார், ஏனெனில் இந்த திட்டம் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப சுகாதார பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

BSH 2019-க்கு பதிவுசெய்த, 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 4.3 மில்லியன் நபர்களும், அவர்களது வாழ்க்கைத் துணைவர்களும் 2019 ஆம் ஆண்டில் மைசாலத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

Bernama