தனிமைப்படுத்தப்பட்ட 33 பேருக்கும் விடுதலை

சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தியத்தலாவ இராணுவ முகாமில், தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டு 14 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்ட மாணவர்கள் 33 பேரும், ஞாயிற்றுக்கிழமை (16) விடுவிக்கப்படவுள்ளனர்.

அந்த மாணவர்கள், பெப்ரவரி 1ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரடப்பட்டனர். எதிர்வரும் 14ஆம் திகதியன்று 14 நாள்கள் நிறைவடைகிறதென தொற்றுநோயியல் விசேட நிபுணர், வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

“அவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கவில்லை. வைரஸ் தொற்றியிருக்காமை கண்டறியப்பட்டமையால், தொடர்ந்தும் தனிமைப்படுத்தி தங்க வைப்பதில் எவ்விதமான பயனும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

tamilmirror