பாக்காத்தானின் முதல் கவுன்சில் கூட்டம் – மாற்றம் காத்திருக்கிறதா?

இன்னும் 3 மாதங்களில் பாக்காத்தான் ஹராப்பானின் முதல் கவுன்சில் கூட்டம் – மாற்றம் காத்திருக்கிறதா?

அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில், நாட்டின் அரசியல் குறித்த பல ஊகங்கள் தோன்றுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில் கடைசியாக பாக்காத்தான் ஹராப்பான் கூடியதிலிருந்து நாட்டின் அரசியலில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அமைச்சரவை மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், பிரதமரை டாக்டர் மகாதீர் முகமதுவிடம் இருந்து பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு பதவி மாற்றம் மற்றும் புதிய அரசியல் கூட்டணி பற்றிய ஊடகங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமராக பதவியில் நீடிக்க பாக்காத்தான் தலைவர் மகாதீருக்கு ஆதரவை வழங்குவதற்காக சில கட்சி தலைவர்கள் விசுவாச உறுதிமொழியில் (SD) கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வந்தன.

அந்த உறுதிமொழியில் (SD) ஒப்புதல் அளித்த கட்சிகளில் அம்னோ, பாஸ், பெர்சத்து மற்றும் அன்வரின் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு ஆதரவளித்த பி.கே.ஆர் பிரதிநிதிகளும் அடங்குவதாக சரவாக் அறிக்கை போர்டல் கூறுகிறது.

உறுதிமொழியைப் (SD) பற்றி தனக்குத் தெரியாது என்று அன்வார் கூறினார், அதே நேரத்தில் பி.கே.ஆர் துணைத் தலைவர் ஜுரைடா கமருதீன் அந்த அறிக்கையை மறுத்துள்ளார்.

டாக்டர் மகாதீரா? அல்லது அன்வாரா?

பி.கே.ஆர் உள் நெருக்கடியில் அஸ்மினின் வலுவான ஆதரவாளர்களில் ஜுரைடாவும் ஒருவர்.

மகாதீரின் தரப்பில் 130க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக ஆதாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன. ஆதரவு சரவாக் கட்சிகளின் கூட்டமைப்பின் (ஜி.பி.எஸ்)/ Gabungan Parti Sarawak (GPS) சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து வந்தவை என்று அவர் கூறினார்.

இதன்மூலம், அன்வருக்கு வழிவகுக்கும் வகையில் பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தத்தை உணர்ந்தால், மகாதீர் பாக்காத்தான் தலைவர்களிடம் சுலபமாக விளக்கம் அளிக்க முடியும்.

“பிரதமர் ஆதரவிற்கான ஆதாரங்களை பாக்காத்தான் தலைவர்களிடம் காண்பித்து (அவரை ஆதரிக்கும் எம்.பி.க்கள்): சரி, எனக்கு இவ்வளவு ஆதரவு உள்ளது. இப்போது நீங்கள் என்னுடன் இருக்க விருப்பப்பட்டால் இருக்கலாம் இல்லையேல் போகலாம், என்று கூற வாய்ப்புள்ளது” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆனாலும், 129 எம்.பி.க்கள் அன்வாரை ஆதரிப்பதாகவும் மகாதீருக்கு 93 பேர் மட்டுமே ஆதரிப்பதாகவும் மற்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

அனைத்து டி.ஏ.பி. மற்றும் அமானா எம்.பி.க்களும் 39 அம்னோ எம்.பி.க்களில் பாதி பேரும் அன்வாரை ஆதரிப்பனர் என்ற அடிப்படையில் இந்த கணக்கீடுகள் அமைந்தன.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மகாதீருக்கு உறுதியான ஆதரவை வழங்க பலமுறை உறுதியளித்தார். இருப்பினும் அம்னோ இந்த பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டில் இல்லை.

உதாரணமாக, கடந்த வாரம், அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான், அரசியல் கூட்டணியை ஏற்றுக்கொள்வதற்கான முடிவை நன்கு யோசித்து எடுக்குமாறு கட்சிக்கு அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், அன்வார் பிரதமராக வருவதைத் தடுக்கும் முயற்சியில் மகாதீர் இல்லை என்று பிற வட்டாரங்கள் கூறுகின்றன.

“மகாதீருக்கு நெருக்கமான மற்ற தரப்புகள், அவர் அன்வாரை பொறுப்பேற்க விடக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்”.

“மகாதீர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற (பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க) விரும்புகிறார். ஆனால் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை விரும்பவில்லை என்றால், மகாதீரால் என்ன செய்ய முடியும்?” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பல சாத்தியங்கள் உள்ளன

இறுதி முடிவு மக்களவை முடிவில் இருப்பதாக மகாதீரே சமீபத்தில் கூறினார்.

“நாங்கள் உறுதியளித்துள்ளோம், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். எனது கட்சியின் (PH கூட்டணி) ஆதரவு குறிப்பாக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால் நான் பிரதமர் ஆகிவிட்டேன்.

“நான் ராஜினாமா செய்ய விரும்பாவிட்டாலும், சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் என்னை நிராகரித்தால், நான் வீழ்ந்துவிடுவேன். உண்மையான அதிகாரம் மக்களவை மற்றும் அதன் உறுப்பினர்களிடமே இருக்கின்றது” என்று அவர் கூறினார்.

சமீபத்திய நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (NST) செய்திக்குறிப்பில், பாக்காத்தான் கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாகவே அதைப்பற்றிய ஆரூட அறிக்கைகளை வெளியிட்டது. அடுத்த வாரம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என்று கணித்துள்ளது.

NST ஊகப்படி, மூன்று சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறிகிறது. அதில், மகாதீர் ஏராளமான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டணியில் இணைந்ததாக அறிவித்து, அவர் தொடர்ந்து பிரதமராக இருக்க அவர்கள் ஆதரவை வெளிப்படுத்தினர், என்பார் என்று அது ஊகித்துள்ளது.

NST-யின் மற்றொரு ஊகப்படி, மகாதீர் ஒரு பெரிய அமைச்சரவை மறுசீரமைப்பை அறிவிப்பார் என்று இருந்தது.

சமூக ஊடகங்களும் பல்வேறு ஊகங்களால் நிரம்பி வழிகின்றன. அவற்றில் பக்காத்தான் நேஷனல் என்று அழைக்கப்படும் தலைவர்களின் புதிய கூட்டணி அமையும் என்று உள்ளது. மகாதீர் பக்காத்தான் நேஷனல் ஆலோசகராகவும், செம்ப்ராங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுதீன் ஹுசைன் தலைவராக பணியாற்றுவார் என்றும் அஸ்மின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் கணிக்கபடுகின்றன.