இந்தோனேசியா ஊழியர்கள் வீடு திரும்புகிறார்கள்

இந்தோனேசியா ஊழியர்கள் வீடு திரும்புகிறார்கள்

தங்கள் பாஸ்போர்ட்டை பிடித்தம் செய்து வைத்திருப்பதாக அவர்களின் முதலாளி மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கிள்ளானில் உள்ள ஒரு துப்புரவு நிறுவனத்தின் எட்டு முன்னாள் ஊழியர்கள் இன்று தங்கள் தாய்நாடான இந்தோனேசியாவுக்குத் திரும்புகிறார்கள்.

முதலாளி RM80,000க்கும் அதிகமான பாக்கி ஊதியத்திற்கான கட்டணத்தில் கையெழுத்திட்ட பிறகு அவர்கள் நாடு திரும்புகிறார்கள் என்று சிலாங்கூர் தொழிலாளர் துறையின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

“பிப்ரவரி 5 ஆம் தேதி Depot Tahanan Semenyih தடுப்புக்காவலில் விசாரணை நடைபெற்றது … மேலும் RM85,100.19 தொகை சம்மதிக்கப்பட்டது.

“முழு கட்டணம் இந்தோனேசிய தூதரகம் மூலம் செலுத்தப்பட்டது” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தீர்வு எட்டப்பட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.

அவர்கள் கோலாலம்பூர்-ஜகார்த்தா விமானத்தில் பயணிப்பார்கள் என்றும், அந்நிய தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பான தூதரக அதிகாரி ஒருவர் உடன் செல்வார் என்றும் கூறப்பட்டது.

ஜகார்த்தாவில், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு, மற்றொரு அதிகாரியால் வரவேற்கப்படுவார்கள்.

கடந்த மாதம், அந்த துப்புரவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தியோ ஜியோக் ஹியோங், 41, பாஸ்போர்ட் சட்டம் 1966 இன் பிரிவு 12 (1) (எஃப்) இன் கீழ் எட்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி அல்ல என்று வாதாடினார்.

நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் அந்நிய தொழிலாளர் பராமரிப்பு மையத்தில் (Migrant Care Malaysia) அந்நிய தொழிலாளர் ஒடுக்குமுறை என்ற குற்றச்சாட்டுகளை புகார் செய்தனர். மேலும் கோலாலம்பூரில் உள்ள அந்த சர்வதேச மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இன்று தொடர்பு கொண்டபோது, மலேசிய அந்நிய தொழிலாளர் பராமரிப்பு மைய/Migrant Care Malaysia பிரதிநிதி அலெக்ஸ் ஓங், தவறு செய்தவர் மீது செயல்பட அதிகாரிகளின் அதிகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

இந்தோனேசியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்வதாக அவர் கூறினார். தொழிலாளர் சட்டங்களை மீறிய பதிவு வைத்திருக்கும் மலேசிய முதலாளிகளுக்கு இந்தோனேசிய மக்களை வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தோனேசிய தொழிலாளர் ஏஜெண்டு நிலையங்கள் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்