இயற்கையை மாசுபடுத்திய நபர்கள் கைது

இயற்கையை மாசுபடுத்திய நபர்கள் கைது

இரண்டு சந்தேக நபர்கள் எண்ணெய் கழிவு கொட்டுதல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

சுபாங் தொழில்துறை பகுதியில் உள்ள ஜாலான் டிஎஸ் 6/7 என்ற இடத்தில் கழிவு கலந்த எண்ணெய்யை ஒரு சாக்கடையில் கொட்டிய சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு லாரி ஓட்டுனர் மற்றும் ஒரு தொழிற்சாலை தொழிலாளி தடுத்து வைக்கப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமையன்று ஒரு தொழிற்சாலையில் நடந்த சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டதாக சுற்றுச்சூழல் துறை/Department of Environment (DOE) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலை பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசப்படுவதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, DOE, காவல்துறை மற்றும் சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPSJ) ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

“நான்கு கழிவுநீர் மாதிரிகள் மலேசிய வேதியியல் துறைக்கு/Malaysian Chemistry Department பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல்களை வழங்க அல்லது தூய்மைக்கெடு குறித்து புகார் அளிக்க விரும்பும் பொது மக்கள் 1-800-88-2727 என்ற எண்ணில் DOEஐ தொடர்பு கொள்ளலாம்.