வாரிசன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவளிப்பாதாக கூறியுள்ளது

வாரிசன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவளிப்பாதாக கூறியுள்ளது

டாக்டர் மகாதீர் முகமதுவை பிரதமராக ஆதரிப்பதற்கான உறுதிமொழியை வாரீசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது சபாவின் நலனுக்காக என்று, இன்று ஒரு குறுகிய அறிக்கையில், வாரிசன் தலைவர் ஷாஃபி அப்டால் கூறினார்.

“சபாவின் தலைமைத்துவம் எப்போதும் அதன் குடிமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும், குறிப்பாக தற்போதைய அரசியல் சூழலில்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாக்காத்தான் ஹராப்பானை ஆதரிப்பதில் அவர்கள் இன்னும் உறுதியாக இருக்கிறார்களா என்பது குறித்து ஷாஃபி தெளிவாக கூறவில்லை.

ஹராப்பான் மத்திய அரசு இன்று கவிழ்ந்தது. இருப்பினும், எந்தவொரு கூட்டணியும் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான எண்களைக் கொண்டிருக்கவில்லை.

முன்னதாக, ஷாஃபி மகாதீருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தார். மேலும் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

பி.கே.ஆர், டி.ஏ.பி மற்றும் அமானாவுடன் இணைந்து பணியாற்றலாமா என்பது குறித்து வாரிசன் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாலும், அவர்களின் சரவாகிய சகாக்களான கபுங்கன் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்) டிஏபி உடன் பணியாற்றுவதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.