காலை 11 மணிக்கு மகாதீர் மாமன்னரை சந்திக்கிறார்

காலை 10.57: இஸ்தானா நெகாரா – இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அரண்மனைக்குள் நுழைந்தார்.

காலை 11 மணிக்கு மகாதீர் மாமன்னரை சந்திக்கின்றார்.

நாட்டின் அரசியல் கொந்தளிப்பு ஐந்தாவது நாளில் நுழைகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தோல்வியுற்ற அதிகாரப்பரிப்பு முயற்சியுடன் இது தொடங்கியது.

நேற்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அடுத்த இரண்டு நாட்களில் என்ன நடக்கும் என்று ஊகித்து, கட்சி எல்லைகள் இல்லா ஒரு அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ளது என்றார்.

காலை 10.10: டாக்டர் மகாதீர் முகமட் காலை 11 மணிக்கு மாமன்னரைச் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை 8.55: மலேசியாவின் சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்) தங்கள் பிரதமரை வெளிப்படையாக பெயரிட்ட பாக்காத்தான் நடவடிக்கையை வரவேற்கிறது.

பி.எஸ்.எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன், பாக்காத்தானின் உண்மையான பிரச்சினை போராட்டத்தின் அடிப்படையிலோ, அல்லது கொள்கை அறிக்கையிலோ அல்ல, ஆனால் வாக்குறுதிகளை அலட்சியப்படுத்தி அதை செயல்படுத்துவதிலும் மிகவும் பலவீனமாக இருப்பது தான் இங்கு பிரச்சனையாக உள்ளது”.

“அதிகார மாற்றங்கள் குறித்து பாக்காத்தான் அடிக்கடி ஈடுபடுகின்றது. அதோடு, இனப்பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தும் அதற்கு இல்லை” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் டாக்டர் மகாதிர் முகமட் ஒரு கூட்டணி அல்லது ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான தனது ஆணையை இழந்துவிட்டதாகவும், அவருக்கு பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு இல்லை என்றும் கூறினார்.

“ஆகையால், அவர் பதவி விலகுவதும், நமது நாட்டின் அரசியல் எதிர்காலத்தை மற்ற தரப்பினர் கையாளவிடிவதுமே சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

“மகாதீர் பதவியை விட்டு விலகி, அமைதியான மாற்றத்தை ஏற்படுத்துவது ஒரு சிறந்த வலதுசாரி அரசியல்வாதியின் விவேகமான செயலாகக் கருதப்படும். இல்லையெனில், இனவெறி, குரோனித்துவம் மற்றும் பல விடயங்களால் கொந்தளிப்பு தொடர்ந்தால், அவர் நம்பிக்கையை கொடுத்து, பின் கெடுத்தார் என்ற பழிக்கு ஆளாகுவார்” என்று அருட்செல்வன் கூறினார்.

காலை 8.15: அம்னோ நாடு முழுவதிலுமிருந்து அதன் அனைத்து தலைவர்களையும் இன்று கட்சி தலைமையகத்தில் கூட ஆணையிட்டது.

கட்சியின் தலைவர் மற்றும் உயர் சபை உறுப்பினர்களுடன் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் சிறப்பு கூட்டத்திற்கு அவர்கள் அழைக்கப்பட்டதாக அம்னோ பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா தெரிவித்தார்.

ட்விட்டரில் அவர், “தற்போதைய சூழ்நிலையில் ஒரே வழி தான் உள்ளது !!! மக்களுக்கு அதிகாரத்தை கொடுங்கள், பாராளுமன்றத்தை கலைத்து, 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

காலை 7.30 மணி: தற்போதைய நெருக்கடி குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி அகமட் மலேசியர்களிடம் மன்னிப்பு கோருகிறார்.

அனைத்து அரசியல்வாதிகளும் ஒரேமாதிரிதான் உள்ளனர் என்று சிலர் கருதி இருக்கலாம் என்று அவர் கூறினார்.

“இது கடந்த காலத்தில் ஒரு சீர்திருத்தத்தைத் தூண்டிய ‘மக்கள் அரசியல்’ அல்ல. இந்த முறை மக்களுக்கு திகட்டலாகவும், அசிங்கமாகவும், அறுவறுப்பாகவும் கூட இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

ஆகவே, அரசியல்வாதிகளின் மோசமான நடத்தை, பேராசை, தங்கள் போராட்டத்தையும் நண்பர்களையுமே கைவிடும் செயல் உள்ளிட்ட சுமைகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆளாக்கப்படமாட்டார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.

“இது சுமூகமான வாழ்வை சீர்குலைத்து, மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சுமைப்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.

இன மற்றும் மத உணர்வுகளை சீண்டி விளையாடி நிலைமையை மேலும் மோசமடையச் செய்யவேண்டாம் என சில தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.